பிரபல பொலிவுட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார்

60

புகழ்பெற்ற பொலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மும்பையில் உள்ள கோகிலாபென் வைத்தியசாலையின் தனது 53 வயதில் காலமானார்.

லண்டனில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த இர்ஃபான் கானின் உடல்நிலை மோசமானதால் நேற்று மும்பையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

தனது இயல்பான நடிப்பிற்காக மிகவும் பேசப்பட்ட இர்ஃபான் கான், பொலிவுட்டில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மேலும் லைப் ஒப் பை, ஸ்லம்டோக் மில்லினியர், ஜுரசிக் வேல்ட் போன்ற ஆங்கில படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு பான் சிங் தோமர் என்ற படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றுள்ளார்.