பயிற்சிகளை ஆரம்பித்தது இலங்கை அணி; திமுத் மயக்கமடைந்தார்

104

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி நடவடிக்கைகள் 81 நாட்களின் பின்னர் நேற்று ஆரம்பமான நிலையில்,  களப் பயிற்சிகள் இன்று ஆரம்பமாகின.

அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட 13 வீரர்கள் முதற்கட்டமாக 12 நாட்கள் தங்கியிருந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய பயிற்சிகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வீரர்கள் பயிற்சிகளில் இன்று ஈடுபட்டிருந்தபோது அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மயக்கமடைந்துள்ளார்.

அதி உஷ்னமான காலநிலையால் அவருக்கு இந்த மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.