கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது கிரிக்கெட் வீரர்

438

பாகிஸ்தானின் முன்னாள் முதற்தர கிரிக்கெட் வீரரான ரிஹாஸ் செய்க் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்த இரண்டாவது பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரராக இவர் பதிவாகியுள்ளார்.

51 வயதான, இடது கைது சுழற்பந்து வீச்சாளரான செய்க் பாகிஸ்தானில் 43 முதற்தர போட்டிகளில் பங்கேற்று 116 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் மற்றுமொரு முதற்தர கிரிக்கெட் வீரரான சபார் சர்ப்ராஸ் தனது 50ஆவது வயதில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.