சட்டமன்ற உறுப்பினர் கொரோனாவிற்கு பலி

66

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் J. அன்பழகன், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

62 வயதான இவர், கடந்த 2ஆம் திகதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த 8 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வந்த அவருக்கு செயற்கைச் சுவாசக் கருவியினூடாக ஒக்ஸிஜின் செலுத்தப்பட்டது.

இந்தநிலையில் இன்று (10) காலை 8 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மறைந்த சட்டமன்ற உறுப்பினர், 2001, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது. (newsfirst.lk)