‘ரஹ்மானின் பாடல்களை நான் கேட்கவே இல்லை’ உலகநாயகன் பகிர்வு

57

“ஊரே கொண்டாடியதற்கு பிறகுதான் நான் ஏ.ஆர். ரஹ்மானை கவனித்தேன். அவருடைய பாடல்களை அதுவரையில் நான் கேட்கவே இல்லை.” என உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற நேரலை கலந்துரையாடலில் பங்கேற்றனர். இதன்போது பல்வேறு விடயங்களை கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார்.

”தலைவன் இருக்கின்றான்’ படத்திலுள்ள பாடல்கள் மிகச்சிறந்த பாடல்களாக இருக்கும். ஓர் இயக்குநராக ரஹ்மானுடன் வேலை செய்வது மிகவும் சுலபம்.”

”ஹேராம் படம் எடுத்த போது சினிமாகாரர்கள் எல்லோரும் ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்டாங்க. இப்படி ஒரு சினிமா பணம் வந்ததும் நான் எடுப்பேன்னு என் நண்பர்கள்கிட்ட சொல்லியிருந்தேன். என் ஆசை இதுதான். அதனாலதான் ஹேராம் எடுத்தேன்.”

”ரஹ்மான் வீட்டில் அவர் பயன்படுத்திய பழைய கருவிகள் எல்லாம் அவருடைய வீட்டு சுவற்றில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நமக்கு ஏன் இப்படி தோணவில்லை என எனக்குத் தோன்றியது.”

”பல பரிமாணங்கள் இல்லாதவர்கள் நிச்சயம் கலைஞர்களாக இருக்க முடியாது. ரஹ்மான் பாடசாலை படிப்பை கூட முடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவரிடம் ஒரு விதமான அமைதி இருக்கும். சிலர் சின்ன வயசுலேயே ஆலோசனை சொல்ற அளவிற்கு இருப்பாங்க. அப்படிப்பட்டவர்தான் ரஹ்மான்.”

”ஆண், பெண் சமம் எல்லாம் இருக்கட்டும். ஆனால், நம்மால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.”

”அது பெண்களால் மட்டுமே சாத்தியம். அம்மாக்கள் எல்லா விஷயமும் தெரிந்தவர்களாக இருந்தாலும் குழந்தைகள் சொல்லும்போது அதை புதியதாக கேட்பது போலத்தான் கேட்பார்கள். ஒரு கதையை அம்மாவிடம் கூறினால் இந்தக் கதாபாத்திரம் ஏன் இப்படி இருக்கிறது எனக் கேட்டு ஒரு கேள்வியால் ஒட்டுமொத்த கதையையே மாற்றி புதிய கதையாக்கி விடுவார்கள்.” எனக் குறிப்பிட்டார்.