கொரோனா தனிமைப்படுத்தலில் உள்ள 8 பேருக்கு மலேரியா தொற்று!

59

நாட்டிலுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவரும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

கம்பஹா மற்றும் மாத்தளை பகுதிகளிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்கள் ஒரு வருடத்திற்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேசிய மலேரியா ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.