இலங்கைக்கு முதலாவது ஒலிம்பிக் பதக்கம்

45

இலங்கைக்கு முதலாவது ஒலிம்பிக் பதக்கம் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்றாகும்.

1948 ஆம் ஆண்டு, (31-07-1948) ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீற்றர் தடைத்தாண்டல் ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்டு, மேஜர் தேசமான்ய டங்கன் வைட் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதலாவது இலங்கையர் மற்றும் தெற்காசியவர் இவரே.

இலங்கை விளையாட்டு வீரரும், படை வீரருமான இவர் பின்நாட்களில் இலண்டனில் நிரந்தரமாக குடியேறியதோடு,  1998ஆம் ஆண்டு காலமானார்.

இவருக்குப் அடுத்ததாக, இலங்கையைச் சேர்ந்த சுசந்திகா ஜயசிங்க, 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.