3ஆம் திகதியும் தேர்தல் பிரசாரம்?

56

ஓகஸ்ட் 5ஆம் திகதி  தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 3ஆம் திகதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கட்சிகளின் செயலாளர்களினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ்  பரவல் காரணமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுக்க முடியாதுள்ளதாக கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணையாரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் 3ஆம் திகதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (thamilan.lk)