SLPP வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவிற்கு மரண தண்டனை

42

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்தை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்திருந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான நிலந்த ஜயகொடி மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஆகியோரே மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனையவர்களாவர்.