கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் பெண்ணுக்கு சுகபிரசவம்

26

சவுதி அரேபியாவில் இருந்து, நாடு திரும்பி விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த கர்ப்பினி பெண்ணுக்கு நேற்றைய தினம் (31) குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக, யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இந்த பெண் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் விடத்தல்பளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், நேற்று முன்தினம் குழந்தைப் பேற்றுக்கான வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இராணுவத்தினரால், யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் மகப்பேறு இடம்பெற்றுள்ளது.

சிகிச்சையின் பின்னர், குறித்த தாயையும், சேயையும் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து, திருகோணமலைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (thaarakam.lk)