பொதுத் தேர்தல் 2020; ஐந்து கட்சிகள் சார்பில் 59 பெண்கள் களத்தில்

52

ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐந்து பிரதான அரசியல் கூட்டணிகள் சார்பாக 59 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக manthiri.lkஇன் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண் வேட்பாளர்கள் விபரம்;

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 14
தேசிய மக்கள் சக்தி – 16
ஐக்கிய தேசியக் கட்சி – 15
ஐக்கிய மக்கள் சக்தி – 10
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 4

இதேவேளை, கடந்த நாடாளுமன்றத்தின் 225 மொத்த உறுப்பினர்களில், 5 வீதம் மாத்திரமே பெண் உறுப்பினர்களாக காணப்பட்டனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தின் உலகளாவிய தரவரிசைக்கு அமைய, மொத்தம் 193 நாடுகளில் இலங்கை 182ஆவது இடத்தில் உள்ளது.