‘நிராகரிக்கப்பட்ட வாக்குள் அதிகளவு பதிவான தேர்தல் 2020’ காரணம் என்ன?

93

பொதுத் தேர்தலில் மொத்தமாக  7,44,373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன, இது மொத்த வாக்கெண்ணிக்கையில் 4.58% வீதமாகும்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இம்முறையே அதிகளவான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவானதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

அதிகளவான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவானமைக்கு நான்கு முக்கியமான காரணங்கள் காணப்படுவதாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

  • பொதுமக்களுடைய தேர்தல் முறைமை தொடர்பான அறிவுமட்டம்.
  • சிலர் தாம் வாக்களிக்க வேண்டும் என்ற கடமைக்காக வாக்களிக்கிறார்களே தவிர தேவையான வகையில் சரியான வகையில் வாக்களிப்பதில்லை.
  • ஐக்கிய தேசியக்கட்சியில் ஏற்பட்ட பிளவு கட்சி ஆதரவாளர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்தமை அல்லது இரண்டு சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களில் யாரைத் தெரிவு செய்வது என்பதில் ஏற்பட்ட குழப்பநிலை
  • வாக்குச்சீட்டில் தவறாக அடையாளங்களை இட்டிருத்தல்.

பொதுத் தேர்தலில் மொத்தமாக, 12,343,302 (75.89%) வாக்குகள் அளிக்கப்பட்டன, இதில் 744,373 (4.58%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கமைய மொத்தமாக செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்க 11,598,929 (71.32%).

மேலும், 39,20,583 பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.