கடமைகளை ஆரம்பித்தார் பிரதமர்!

82

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட நிலையில் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச,  ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்று இலங்கை வரலாற்றில் தேர்தலில் அதிகளவான விரும்பு வாக்கை தனதாக்கியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.