ரணில் பதவி விலகவில்லை புதிய ஊடக அறிக்கை இதோ!

88

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க இதுவரை விலகவில்லை என, விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும், நேற்றைய தினம் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடனான சந்திப்பின்போது, கட்சிக்கு ஒரு புதிய தலைவரின் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் குறித்து கலந்துரையாட நியமிக்கப்பட்டுள்ள குழு, அடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தின்போது, இதுத் தொடர்பில் அறிவிக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, கட்சியை முழுயாக மறுசீரமைப்பு செய்து, வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டுமெனவும், ஐக்கிய தேசியக் கட்சி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகல் தொடர்பில் குறித்த ஊடக அறிக்கையில் எந்தவொரு விடயமும் தெரிவிக்கப்படவில்லை.