2/3 பெரும்பான்மையை உறுதிப்படுத்திய அரசாங்கம் ‘151 ஆசனங்கள்’

88

பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் ஆசனங்களைப் பெற்ற நான்கு அரசியல் கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளது.

இதற்கமைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன பொதுத் தேர்தல்களில் தேசியப் பட்டியல் உள்ளடங்களாக 145 ஆசனங்களைப் பெற்றிருந்தது.

நடைபெற்று முடிந்த தேர்தலில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இரு ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லா ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

இந்த நான்கு கட்சிகளும் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கியுள்ளதால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைமைய பெற்றுள்ளதோடு, மொத்தமாக 151 ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது.