வித்தியாசமான முறையில் பணிகளை ஆரம்பித்த அமைச்சர் ஜோன்ஸ்டன்

88

இலங்கையின் புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று கடமைகளை ஆரம்பித்தனர்.

இதற்கமைய, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, குருநாகல் – நீர்கொழும்பு உமாங் வீதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டியதன் மூலம் இன்று கடமைகளை ஆரம்பித்தார்.

அமைச்சின் வளாகத்தில் கடமைகளை ஏற்றுக்கொள்ளும் பாரம்பரியத்தை புறந்தள்ளி, அமைச்சர் பெர்னாண்டோ அதற்கு பதிலாக வீதியை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டியதன் மூலம் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கொழும்பு 07 இல் அமைந்துள்ள தர்மயாதனாயத்தின, எல்லே குணவன்ஸ தேரரிடம் ஆசிப்பெற்ற பின்னர் கடமைகளை ஆரம்பித்தனர்.

பந்துல குணவரத்ன கோட்டையில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.

பேராசிரியர் பீரிஸ் பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.

வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்ட பந்துல குணவர்தன இன்று காலை கொழும்பு, வொக்சால் வீதியில் அமைந்துள்ள தனது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள, வெகுஜன ஊடக அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி சுகாதார அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரும் இன்று அந்தந்த அமைச்சுகளில் கடமைகளை ஆரம்பித்தனர்.

நகர அபிவிருத்தி, கடற்கரை பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் பொது சுகாதார இராஜாங்க அமைச்சர்  நாலக கொடஹேவா, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோரும் இன்று தமது கடமைகளை ஆரம்பித்தனர்.

இரத்தின மற்றும் ஆபரண கைத்தொழில் துறை அமைச்சர் லோஹன் ரத்வத்த, விமான மற்றும் ஏற்றுமதி விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி அமைச்சர் டி. வி. சானக, சிறைச்சாலை மறுசீரமைப்பு, கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர், சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே ஆகியோரும் தமது அமைச்சுகளில் கடமைகளை ஆரம்பித்தனர்.