அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட அப்பிள் (photos and video)

86

அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய உற்பத்திகள் தொடர்பிலான அறிமுகம் எளிமையாக இடம்பெற்று முடிந்துள்ளது.

இந்த நிகழ்வில் அப்பிள் நிறுவனம் புதிதாக Apple Watch Series 6, Apple Watch SE, Apple Fitness+, New iPad Air, iPad மற்றும் Apple One ஆகிய  சாதனங்கள் மற்றும் சேவைகளை அப்பிள் அறிவித்துள்ளது.

செப்டெம்பர் 15 ஆம் திகதி. அப்பிள்  ‘டைம் ப்ளைஸ்’ என்ற பெயரில் முழுமையான டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வை நிறுவனம் நடத்தியது.

“Apple Watch Series 6“ இரத்தத்தில் உள்ள ஒக்சிசன் அளவை கண்டறியும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், பெமிலி செட் அப் என்ற புதிய வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் மூலமாக சிறுவர்ககளுக்கும் கிட்ஸ் அப்பிள் வொட்ச் செட் அப் செய்து கொள்ளலாம்.

Apple Watch Series 6இன் விலை 399 டொலர்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், iPad 8ஆவது தலைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் ஓவர்கிளாக் செய்யப்பட்ட அப்பிள் ஏ12 பயோனிக் ப்ரொசர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது  முன்னைய ப்ரொசரை விட 40 சதவீதம் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவைதவிர மேம்பட்ட கமரா, அப்பிள் பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. அப்பிள் பென்சில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதிய ஐபேட் 10.2 இன்ச் ரெட்டினா திரையை கொண்டுள்ளது.

புதிய சாதனங்களுடன் அப்பிள் நிறுவனம் Apple One சந்தா முறை மற்றும் Apple Fitness+ செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இவை தவிர மிக முக்கிய OS அப்டேட்களை வெளியிட இருப்பதாகவும் அப்பிள் நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் பல்வேறு புது அம்சங்கள் கொண்ட அப்பிள் OS வெளியாகவுள்ளது.