‘அப்பிள் நிறுவனத்தின் Apple Park’ உலகம் வியக்கும் வடிவமைப்பு

69

தொழில்நுட்ப அசுரனான அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் மீது ஈர்ப்பு கொண்டவர்களுக்கு அப்பிள் நிறுவனத்தின் பிரதானக் கட்டிடம் மீதும் ஈர்ப்பு காணப்படும். Apple Park என அழைக்கப்படும் இந்த கட்டிடம் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

2006 ஸ்டீவ் ஜொப்ஸ் இந்த கட்டிடத்தை அமைப்பது தொடர்பிலான ஆரம்பக்கட்ட பணிகளை ஆரம்பித்தார். அப்பிள் நிறுவனத்தின் 12 ஆயிரம் ஊழியர்களையும் ஒரே கட்டிடத்தில் பணியாற்ற வைப்பதே இதன் நோக்கமென 2011ஆம் ஆண்டு ஜொப்ஸ் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய 2013ஆம் ஆண்டு  3 பில்லியன் அமெரிக்க டொலரில் நிறைவு செய்யும் நோக்கில், நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகின. எனினும் 5 பில்லியன்  டொலர் செலவில் நிர்மாணப் பணிகள் நிறைவுப்பெற்றன.

இதன் விசேட அம்சங்கள் இதோ;

  1. மொத்தம் 175 ஏக்கர் நிலம்
  2. 2.8 மில்லியன் சதுர அடி பிரதான கட்டிடம்
  3. 4.17 பில்லியன் பெறுமதியான பிரதான கட்டிடம்
  4. 100% புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது
  5. உலகின் மிகப்பெரிய வளைந்த கண்ணாடி அமைப்பு
  6. இயற்கையாகவே காற்றோட்டமான மிகப்பெரிய கட்டிடம்
  7. 17 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம்
  8. 9,000 வறட்சி எதிர்ப்பு மரங்கள்
  9. 100,000 சதுர அடி உடற்பயிற்சி நிலையம்
  10. ஸ்டீவ் ஜொப்ஸ் திரையரங்கு