இலங்கையில் 42,000 பேருக்கு கொரோனா தொற்றில்லை

55

நேற்றைய தினம் மாத்திரம் 320 நபர்கள் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொரொனா பரவலை தடுப்பதற்காக தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களான மிகிந்தலையில் ஒருவரும், இலங்கை பலாலி விமானப்படை தனிமைபடுத்தல் நிலையத்தில் 62 பேரும், முல்லைத்தீவு விமானப்படை தனிமைபடுத்தல் நிலையத்தில் 08 பேரும், ஹோட்டல் ஜெட்வின் புளு 41 பேரும், பியகம கிராமத்தில் 58 பேரும், திக்வெல்ல உல்லாச விடுதியில் 61 பேரும், சீகிரிய பெஸ்கோ விலா 25 பேரும், சீகிரியா கிராமத்தில் 52 பேரும், ராஜகிரிய ஆயுர்வேத தனிமைபடுத்தல் நிலையத்தில் 05 பேரும், மந்தார உல்லாச விடுதி மிரிஸ்ஸயில் 7 பேரும் தனிமைபடுத்தலின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய இதுவரை 42,582 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். அத்துடன் தற்போது முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 59 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,895 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

17ஆம் திகதி நாடளாவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,640 ஆகும். இதுவரை நாடளாவியல் ரீதியாக நடாத்தப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 262,378 ஆகும். (adaderana.lk)