அரசியல்வாதியின் மகனுக்கு கொழும்பில் திருமணம்; சட்டத்தை மீறி நிகழ்வு (Photos)

295

மேல் மாகாணம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மலையகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரது மகனுக்கு கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தில் திருமண நிகழ்வுகள், சமய நிகழ்வுகள், மக்கள் அதிகமாக ஒன்றுதிரளும் நிகழ்வுகள் மற்றும் மத வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தில் சுமார் 50 பேர் வரையில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த ஹோட்டலில் இன்று நடந்த திருமண நிகழ்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. (truenews.lk)