ஊடகவியலாளர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல்

71

ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் (20ஆவது திருத்த விவாதம்) நாடாளுமன்ற செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, சண்டே டைம்ஸ் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.