கொரோனா தொற்று; அரசாங்கத்தின் தீர்மானங்கள், தொற்றாளர்கள் விபரம் (Update)

188

ஊடகத்துறை அமைச்சின் பணிப்பாளர் ஒருவர் உள்ளிட்ட மேலும் சிலருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார அமைச்சில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்க முடியும் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹெமந்த ஹெரத் தெரிவிக்கின்றார்.

வத்தளை பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் 49 பேருக்கு கெரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ் மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 78 பொலிஸ் அதிகாரிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் கடந்த 29ஆம் திகதி மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறிய 454 பேர் நாட்டின் பல பகுதிகளில் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

புளத்கொஹுபிடிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புளத்கொஹுபிடிய மற்றும் லெவல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புளத்கொஹுபிடிய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அமில குணசேகர தெரிவித்துள்ளார்.