திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தலாம்; பொலிஸார் அறிவிப்பு

194

மேல் மாகாணத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளில் திருமண வைபவ ஏற்பாடுகளை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக மேற்கொள்ள முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளினால் இந்த வைபவங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

ஊரடங்கு அமுலில் இல்லாத பிரதேசங்களில் திருமண வைபவங்களை நடத்துவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். (adaderana.lk)