புலிகள் அமைப்பு மீதான தடையை ஏன் நீக்கக்கூடாது? இந்தியாவின் விளக்கம் இதோ!

52

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தமிழீழ புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என இந்தியா பிரித்தானியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2000ஆம் ஆண்டளவில் பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.

எனினும், யுத்தம் முடிவுக்கு வந்தது 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இலங்கையில் எந்த விதமான வன்முறைகளும் இடம்பெறாததை  அடுத்து புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த நிலையிலேயே புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்து விசாரணை நடத்தும் நீதிமன்றத்தினால் கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தியா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஆகியோரை விடுதலைப் புலிகள் அமைப்பே படுகொலை செய்ததாகவும் இந்தியா கூறியுள்ளது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பிரித்தானியாவிடம் கோரியுள்ளது.

இந்த பின்னணியிலேயே இந்தியாவும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.