நுவன் சொய்ஸாவிற்கு மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் தடை

53

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு தீர்ப்பாயத்தின் கீழ், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் பயிற்றுவிப்பாளருமான நுவன் சொய்ஸா குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மூன்று ஊழல் தடுப்பு குறியீட்டை அவர் மீறியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன.

பத்தி 2.1.1 – ஒரு போட்டியின் முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது பிற அம்சங்களை சரிசெய்ய அல்லது திட்டமிட அல்லது வேறுவிதமாக செல்வாக்கு செலுத்துவதற்கான ஒரு ஒப்பந்தம் அல்லது முயற்சிக்கு கட்சியாக இருப்பதற்காக.

பத்தி 2.1.4 – எந்தவொரு பங்கேற்பாளரும் பத்தி 2.1ஐ மீறுவதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோருதல், தூண்டுதல், கவர்ந்திழுத்தல், அறிவுறுத்தல், வற்புறுத்துதல், ஊக்குவித்தல் அல்லது வேண்டுமென்றே வசதி ஏற்படுத்தல்.

பத்தி 2.4.4 – குறியீட்டின் கீழ் ஊழல் நிறைந்த நடத்தைகளில் ஈடுபடுவதற்கு பெறப்பட்ட எந்தவொரு அணுகுமுறைகள் அல்லது அழைப்புகள் பற்றிய முழு விவரங்களையும் ஊழல் எதிர்ப்பு தீர்ப்பாயத்திற்கு வெளிப்படுத்தத் தவறியமை. ஆகிய குற்றச்சாட்டுகள் சொய்ஸா மீது சுமத்தப்பட்டுள்ளன. 

நுவன் சொய்ஸாவிற்கு எதிராக 2018ஆம் ஆண்டு ஊழல் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நுவன் சொய்ஸா கிரிக்கெட் தொடர்பிலான எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்த தடையுத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.