லங்கா பிறிமியர் லீக்; கொழும்பு கிங்ஸ் அணியின் வீரருக்கு கொரோனா

70

லங்கா பிறிமியர் லீக் போட்டியில் பங்கேற்றுள்ள கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ரவீந்தர்பால் சிங் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் அண்ட்ரு ரஸ்ஸல் மற்றும் சிலருடன் கனேடிய கிரிக்கெட் வீரரான ரவிந்தர்பால் சிங் நேற்று இலங்கையை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ரவிந்தர்பால் சிங் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹம்பாந்தோட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட ரவிந்தர்பால் சிங் ஒரு கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.