LPL 20204; தொலைக்காட்சி உரிமை, சர்வதேச வர்ணனையாளர்கள், பிரதான அனுசரணை (Full Report)

53

இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரிமியர் லீக் போட்டிகளின் உள்ளூர் ஒளிபரப்பு உரிமை சுயாதீன தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

மேலும், சர்வதேச ரீதியில், Sky Sports, Geo Super மற்றும் PTV Sports ஆகிய தொலைக்காட்சிகள் கைப்பற்றியுள்ளன.

இதேவேளை, ஹேசல் கிப்ஸ், மைக் ஹேய்ஸ்மன், டெரன் கங்கா, ரசல் ஆர்னல்ட், ஆமிர் சொஹைல் மற்றும் ரொசான் அபேசிங்க ஆகிய சர்வதேச வர்ணனையாளர்கள் இந்த தொடரில் கடமையாற்றவுள்ளனர்.

My11Circle என்ற இந்திய நிறுவனம் இந்தத் தொடருக்கான பிரதான அனுசரணையை வழங்கியுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குப்பற்றும் ஐந்து அணிகளும் ஹம்பாந்தோட்டைக்கு வருகைத் தந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.

ஹம்பாந்தோட்டை ஷங்கிரில்லா நட்சத்திர விடுதியில் ஐந்து அணிகளின் வீரர்கள் மற்றும் முகாமைத்துவத்தினர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று அறிவித்தது.

இறுதியாக கோல் கிளாடியேட்டர் அணி ஹம்பாந்தோட்டைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.