சிறைச்சாலைகளில் 617 பேருக்கு கொரோனா தொற்று

59

சிறைச்சாலைகளில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் குருவிட்ட சிறைச்சாலையில் 15 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டிருந்தனர்.

அவர்களுள் 13 பேர் பெண் கைதிகள் எனவும் ஏனைய இருவரும் பெண் அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 578 கைதிகள் மற்றும் 39 அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.