இலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்

71

இலங்கையில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் மொத்தமாக 20,795 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 5,743 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

601 பேர் தொடர்ந்து வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதோடு, 14,962 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90 பேர் இதுவரையில் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இன்று (24) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,974 பேர் ஆகும். அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணி 13,915 மேலும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணி தொற்றாளர்களில் மொத்தமாக 10,691 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று காலை (24) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் மையங்களில் 4,490 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று நவம்பர் 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 10,679 ஆகும்.