பெண் ஊழியரை தாக்கிய பொறியியலாளர் கைது (Update)

133

உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார். பெண் உதவி மேலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்

அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண் ஊழியர் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல் நடத்தும் வீடியோயொன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

சமூக ஊடக தகவல்களுக்கு அமைய, குறித்த சம்பவம் மேல் மாகாணத்தின் உடுகம்பொல பகுதியிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.