அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடும் ஷெஹான் ஜயசூரிய?

59

ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய கிரிக்கெட் வீரர் ஷெஹான் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட்டில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

ஜயசூரிய தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர தீர்மானித்துள்ளதால்  இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

தனது முடிவை அறிவிக்கும் அதேவேளையில், ஷெஹான் ஜயசூர்யா ஒரு தேசிய வீரராக இருந்த காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கு இலங்கை கிரிக்கெட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க பிரஜையை மணந்த ஷெஹான் ஜயசூரிய அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.