வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் கங்குலி

56

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சவ்ரவ் கங்குலி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

கங்குலிக்கு கடந்த 2ஆம் திகதி நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து கொல்கத்தாவில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கங்குலிக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் கங்குலி முழு உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியர் தெரிவித்திருந்த போதிலும், கங்குலி ஓய்வுக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

“நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே வைத்தியசாலைக்கு வருகிறோம். அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. என்னை சிறப்பாக கவனித்துக் கொண்ட அனைத்து வைத்தியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என முன்னதாக வைத்தியசாலையில் இருந்து புறப்படும் போது கங்குலி தெரிவித்துள்ளார்.

”நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன்” எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். (hindutamil.in)