இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கரிசனை

58
A picture taken on October 16, 2019 shows the European Union flags floating in the air in front of the European Commission building in Brussels. (Photo by Kenzo TRIBOUILLARD / AFP) (Photo by KENZO TRIBOUILLARD/AFP via Getty Images)

ஐரோப்பிய ஒன்றியம், இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள கூட்டுச் சந்திப்பில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பிற விடயங்கள் குறித்து கரிசனையை வெளிப்படுத்தவுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியிலும், ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை கூட்டு ஆணைக்குழு கூட்டம் இடம்பெறுமென ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த மாத இறுதியில் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

முன்னதாக, இரண்டு வருட உறுதிப்பாட்டை நிறைவேற்றத் தவறிய இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானத்திற்கான கோரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய தரப்பினரும் இணைந்து மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக, யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தமக்கு கவலையை அளித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது.

இந்தப் பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நியாயாதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின், இலங்கை அலுவலகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டடிருந்தது.