இலங்கை நாடாளுமன்றத்தை அச்சுறுத்தும் கொரோனா, சில அலுவலகங்களுக்கும் பூட்டு

57

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆளும் கட்சி பிரதம கொரடாவின் அலுவலகமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேவை அலுவலகமும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் 15 பேரின் பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மேலதிக செயலாளரும், நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சி பிரதம கொரடாவின் செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரட்னவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாடாளுமன்றத்திலுள்ள ஆளும் கட்சி பிரதம கொரடாவின் அலுவலகமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேவை அலுவலகமும் மூடப்பட்டுள்ளதுடன் அலுவலக பணியாளர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு அலுவலகம் தெரிவிக்கின்றது.

அமைச்சர் வாசுதேவ நாணக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் நாடாளுமன்றத்துடன் தொடர்புபட்டிருந்த பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளருக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே நாடாளுமன்ற அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்க பணிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் நாடாளுமன்ற பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் செயலாளருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து நாடாளுமன்றத்திலுள்ள ஆளும் கட்சி பிரதம கொரடாவின் அலுவலகமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேவை அலுவலகமும் மூடப்பட்டுள்ளதுடன், அலுவலக பணியாளர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.