மூன்று விதமான போட்டிகளிலும் விக்கெட்டுக்களை வீழ்த்தி நடராஜன் சாதனை

61

தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர்கள், கன்னி போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகரமான பந்து வீச்சு பிரதியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழக வீரர்களான தங்கராசு நடராஜன் மற்றும் வொசிங்டன் சுந்தர் ஆகியோர் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட நிலையில், அவர்கள் விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவதும் இறுதியுமான கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் தங்கராசு நடராஜன் அவுஸ்திரேலிய அணியின் மிக முக்கியமான இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் மற்றுமொரு தமிழக வீரரான வொஷிங்டன் சுந்தரும் தனது முதல் சர்வதேச டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் நடராஜன் இரண்டு விக்கெட்டுக்களையும், மொஹமட் சிராஜ், வொஷிங்டன் சுந்தர், ஷர்தல் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதற்கமைய தான் அறிமுகமான மூன்று விதமான (இருபதுக்கு-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட்) போட்டிகளிலும் விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் இந்திய வீரராக நடராஜன் சாதனைப் படைத்துள்ளார்.