ஆபத்துமிக்க புதிய கொரோனா அமெரிக்காவிலும் பரவும் அபாயம்!

62
"Corona virus" alert road sign on the dramatical cloudy background.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட மிகவும் ஆபத்துமிக்க புதிய கொரோனா வைரஸ் மார்ச் மாதத்திற்குள் அமெரிக்காவிலும் ஆதிக்கம் செலுத்தும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறித்த வைரஸானது எதிர்வரும் வாரங்களில் விரைவான வளர்ச்சியை காட்டும் என, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே குளிர்கால கொரோனா எழுச்சியால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்புகளை இந்த வைரஸ் மேலும் அச்சுறுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனின் தடுப்பூசிகளை அதிகரிப்பதற்கான ஒரு இலட்சிய திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களுக்குள் 100 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கான தனது இலக்கை அடைய, தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்துவதில் தனது நிர்வாகம் மிகவும் தீவிரமாக செயற்படும் என அறிவித்துள்ளார்.

புதிய வெகுஜன தடுப்பூசி மையங்களை அமைத்தல், கூடுதலான சுகாதார ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை சமூகங்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசியை கிடைக்கச் செய்வதை உறுதி செய்வதற்கான திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார்.

இதுவரை 12.2 மில்லியன் தடுப்பூசிகள் அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.