சலூனுக்குள் மயங்கிக்கிடந்த மண மக்கள் உள்ளிட்ட அறுவர், என்ன காரணம்?

58

மீரிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு அழகுக்கலை நிலையத்தில் (சலூன்) இரண்டு மணமக்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்க நிலையில் கண்டறியப்பட்டுள்ளனர். 

அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் கூறப்படுகிறது.

அழகுக் கலை நிலையத்தின் உரிமையாளர், மூன்று ஊழியர்கள் மற்றும் திருமண வர்வேற்பு வைபவத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த இருவர் மயக்கமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எயார் கண்டிஷனர் மூலம் வெளியேறிய நச்சு வாயுவை இவர்கள் சுவாசித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எயார் கண்டிஷனர் இயந்திரத்திற்கு அருகில் (வெளிப்புறத்தில்) வைக்கப்பட்டுள்ள ஒரு ஜெனரேட்டர் கட்டிடத்திற்குள் நச்சு வாயு பரவ காரணமாக இருந்திருக்கலாம் எனவும், இதன் விளைவாக அவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் எனவும்  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. (newswire.lk)