சுகாதார நடைமுறைகளை மீறிய 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

55

மேல் மாகாணத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் 1,311 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1,098 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுவது தெரியவந்துள்ளதாகவும், சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட 213 நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.