ரூட் இரட்டைச் சதம், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இலங்கை?

64

இலங்கை அணிக்குஎதிரான முதலாவது டெஸட் போட்டியில் இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் இரட்டைச்சதத்தின் உதவியுடன் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மூடிய மைதானத்திற்குள் இடம்பெறும் இந்தப் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 421 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 228 ஓட்டங்களையும், டேன் லோரன்ஸ் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுக்களையும், லசித் இம்புல்தெனிய 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை பெற்றுக்கொண்டது.

இதற்கமைய 286 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ள நிலையில்  இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.