நாசாவின் ”பெர்சிவரன்ஸ் ரோவர்” செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

58

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ”பெர்சிவரன்ஸ் ரோவர்” (Perseverance rover) செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து எடுத்த முதல் புகைப்படத்தையும் பூமிக்கு அனுப்பியுள்ளதாக, நாசா அறிவித்துள்ளது.

இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாசா, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 2012ஆம் ஆண்டு, க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கிரகத்தின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியிருந்து.

இந்நிலையில், நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவரை, ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஆழமான ஒரு பள்ளத்தில் தரையிறக்கியுள்ளது.

பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு வருடங்களுக்கு செவ்வாய் கிரகத்தின் பாறைகளைத் துளையிடுதல் மற்றுத் முன்பு உயிரினங்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றதா? என ஆராயும் என நாசா தெரிவித்துள்ளது.