IPL வரலாற்றில் முதல் முறையாக, இலங்கை வீரர்கள் இல்லை

50

இந்தியன் பிறிமியர் லீக் வரலாற்றில் முதல் முறையாக, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பின்றி, ஏப்ரல் முதல் ஜூன் முதல் வாரம் வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.

சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்ற ”இந்தியன் பிறிமியர் லீக் 2021” வீரர்களுக்கான ஏலத்தில் இலங்கைகையச் சேர்ந்த எந்தவொரு வீரரும் எந்தவொரு அணியாலும் வாங்கப்படவில்லை.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராக குமார் சங்கக்காரவும், மும்பை இந்தியன்ஸின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜயவர்தனவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பயிற்சி குழாமின் ஒருவராக முத்தையா முரளிதரன் ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அணிகளில் எந்தவொரு இலங்கை வீரரும் இடம்பெறவில்லை.

நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற இந்தியன் பிறிமியர் லீக் 2021 வீரர்களுக்கான ஏலத்தில் இலங்கைகையச் சேர்ந்த எந்தவொரு வீரரும் எந்தவொரு அணியாலும் வாங்கப்படவில்லை.

“எங்களுக்கு இன்னும் பிரதிநிதித்துவம் இருக்கின்றது. எனவே நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்” என ஏலத்தின் பின்னர் மஹேல ஜயவர்தன நகைச்சுவையாக கூறினார்.

“இது சற்று ஏமாற்றமளிக்கிறது. இது ஒரு கடினமான இடம், ஏனென்றால் வெளிநாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சகலதுறை ஆட்க்காரர்களுக்கு மாத்திரமே கிடைக்கிறது.” என ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

“உலக கிரிக்கெட்டில் நீங்கள் சிறந்த வீரர்களைப் பெற முயற்சிக்கும் இடமாக ஐபிஎல் உள்ளது, மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்தி, போட்டித்தன்மையுடன் இருப்பதற்கு இது ஒரு நல்ல செய்தி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம், இசுறு உதான மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் மாலிங்க விலகியதால், உதான மாத்திரமே ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.