அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு அவசியம், தமிழர்களுக்கு ஆட்சியதிகாரம் வேண்டும்

46

தமிழ் மக்கள் தமது கௌரவத்தை, நீதியை பாதுகாப்பதற்கு ஆட்சியதிகாரம் தமிழர்களின் கைகளில் இருக்க வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு உருவாக்கக் குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

”எங்களது சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும். உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும். என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”நாட்டின் பிரதான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமெனின், 87ஆம் ஆண்டுக்கு பின்னர் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலுக்கான பல இணக்கப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை அமுல்படுத்தினால் இணைந்து செயற்பட தயார் என அரசியல் அமைப்பு உருவாக்கக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக அரசியல் அமைப்பு உருவாக்கக் குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.