8 அணிகளும் 57 வீரர்களை விலைக்கு வாங்கின! (முழு விபரம்)

69

சென்னையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 14ஆவது இந்தியன் பிறிமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் 8 அணிகளும் மொத்தமாக 57 வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளன.

இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.

61 இடங்களுக்கு 292 வீரர்கள் ஏலத்தில் போட்டியிட்டதில் இறுதியாக 57 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த வருட ஏலத்தில் பெரும்பாலும் சகலதுறை வீரர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் ஆகியோருக்குதான அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.