”பண ஆதாயத்தின் அடிப்படையில் வாஸ் பொறுப்பற்று நடந்துகொள்கிறார்”

59

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பந்துவீச்சு பயிற்சி ஆலோசகர் சமிந்த வாஸ் இராஜினாமா செய்துள்ளார்.

2021 மார்ச் 26 முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்வதாகவும், மேலும் தான் இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணத்தில் பங்கேற்கபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செய்ய மாட்டார் என்றும் தெரிவித்துள்ள, இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணி மேற்கிந்திய தவுகளுக்கு புறப்பட திட்டமிடப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்னதாக வாஸின் இராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்போது முழு உலகத்தையும் எதிர்கொள்ளும் ஒரு பொருளாதார சூழலில், வாஸ் தனிப்பட்ட பண ஆதாயத்தின் அடிப்படையில் இற்த பொறுப்பற்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.