இலங்கையில் 14 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி

47

கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக நாட்டின் மொத்த சனத்தொகையில் 14 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்குவதற்கும் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, பதில் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த  யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• COVAX வசதியளிப்பின் கீழ்  தடுப்பூசியை பெற்றுக் கொள்வதைத் துரிதப்படுத்துவதற்காக COVAX பொறிமுறை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தரநியம இழப்பீடு ஒப்பந்தத்தில் (Standardized Indemnification Agreement) கையொப்பமிடுவதற்கும்

• இந்தியாவின் The Serum Institute Life Sciences Private Limited இற்கு நேரடி விலைமனுக் கோரலின் அடிப்படையில் Oxford AstraZeneca தடுப்பூசி 10 மில்லியன்களை 52.5 அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை அரச மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் மூலம் கொள்வனவு செய்வதற்கும்

• பிரித்தானியாவின் AstraZeneca நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் 3.5 மில்லியன்களை கொள்வனவு செய்வதற்கும் அரச மருந்துகள் கூட்டுத்தாபனமும் குறித்த நிறுவனமும் ஒப்பந்தமொன்று எட்டுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.