இலங்கை பொலிஸுக்கு 2,000 முச்சக்கர வண்டிகள்!

46

நாடளாவிய ரீதியில் சட்ட அமுலாக்கல் மற்றும் சட்ட ஒழுங்குகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான நிறுவனமான இலங்கை பொலிஸுக்கு ஒப்படைக்கப்படும் கடமைகளைச் சரியான வகையில் மேற்கொள்வதற்கு போதுமானளவு வாகனங்கள் இன்மையால், அதற்கு துரித தீர்வாக 2,000 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.