”புர்கா அணிய இலங்கையில் தடை” அமைச்சரவையில் யோசனை, அலி சப்ரி தெரிவிப்பு

75

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் தான் அறிந்தவரை பாகிஸ்தான் பிரதமருடன் இலங்கை ஜனாதிபதியோ, பிரதமரோ கலந்துரையாடவில்லை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு தலைவர்களும் நாட்டின் வர்த்த விடயங்கள் மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இணைந்து செயற்படுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் அலி சப்ரி, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பக்கச்சார்பான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிவதை தடை செய்வது தொடர்பான திட்டங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

”கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவையில் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. இது திருமணத்திற்கான வயது குறைந்தபட்சம் 18ஆக இருக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. மேலும் திருமணத்தின் போது ஒரு பெண் கையெழுத்திட வேண்டும். இதேவேளை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பொது இடங்களில் முகத்தை அணியும் வகையில் ஆடைகளை அணிவதைத் தடைசெய்ய சட்டங்களைக் கொண்டுவர அமைச்சரவைக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.