புதைப்பதற்கு அனுமதி, பாகிஸ்தானிய பிரதமர் வரவேற்பு

73

உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த விடயத்தை வரவேற்பதாக பாகிஸ்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு வெளியிடப்பட்ட அதிசேட வர்த்தமானியினூடாக பூதவுடலின் தகனம் எனும் சொல்லுக்கு பதிலாக ” பூதவுடலின் தகனம் அல்லது அடக்கம்” எனும் சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மரணிப்பவரின் உடலை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்படும் பணிப்புரைகளுக்கு இணங்கவும் அவரின் மேற்பார்வையின் கீழும் தகனம் அல்லது அடக்கம் செய்யலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிதாக வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் “தகனத்திற்கான அவசிய கடமைகளை” எனும் சொல்லுக்கு பதிலாக “தகனத்திற்கான அல்லது அடக்கம் செய்வதற்கான அவசிய கடமைகளை” எனும் சொல் சேர்க்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.