மாரடைப்பால் உயிரிழந்தார் இயக்குநர் கே.வி ஆனந்த்

88

இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி ஆனந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் தனது 54ஆவது வயதில் காலமானார்.

பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர்.

பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடித்த ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை வைத்து வைத்து இயக்கினார்.

இதனைவிட கோ, கவண், அனேகன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

கே.வி.ஆனந்துக்கு நேற்று இரவு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக தானாகவே வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். எனினும் அவரது உயிரை யாராலும் காப்பாற்றமுடியவில்லை. இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.