ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவிஷ்க குணவர்தன விடுவிப்பு

62

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின், சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கையின் முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தனவிற்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை நீக்கியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் நிறுவனத்திற்கு பதிலாக, சர்வதேச கிரிக்கெட் பேரவை அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய அவர் கிரிக்கெட்டில் ஈடுபட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற பத்துக்கு-10 லீக் கிரிக்கெட் போட்டிகளின் போதே, நுவன் சொய்சா மற்றும் அவிஷ்க குணவர்தன விதிமுறைகளை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்திருந்தது.

நுவன் சொய்சாவுக்கு எதிராக 4 விடயங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதோடு, அவிஷ்க குணவர்தனவிற்கு எதிராக 2 விடயங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், அவிஷ்க குணவர்தனவிற்கு எதிராக சுமத்தியிருந்த இரண்டு குற்றச்சாட்டுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை நீக்கியுள்ளது.